கல், மணல் போன்றவற்றிற்கான அனுமதி பத்திரம் ஒரே இடத்தில்!

Saturday, March 31st, 2018

நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல், மண் ஆகியவற்றிற்கான அனுமதி பத்திரத்தை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் முறையை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி  உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிர்மாணத்துறையில் காணப்படும் சவால்கள் மற்றும் நடைமுறை நிலமைகள் குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கல், மணல் மற்றும் மண் என்பவற்றை பெற்றுக்கொள்ளும் போது மோசடி வர்த்தகர்கள் மேற்கொள்ளும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இருப்பினும் நிர்மாணத்துறைக்கு தேவையான கல், மணல் மற்றும் மண் என்பனவற்றை உரிய இடங்களில் பெற்றுக்கொள்ள எந்த தடைகளையும் விதிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106