தொழிலாளர் தினத்தை பிற்போட்டமைக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

Saturday, March 31st, 2018

எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி வெசாக் போயா தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை தொழிலாளர் தினத்தினை மே 07ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

மேற்குறித்த தீர்மானத்தினை உலகில் எந்தவொரு பெளத்த நாடும் எடுத்ததில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் வெசாக் தினத்தைக் கொண்டாடும் உரிமையைப் போன்றே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடவும் உரிமை உண்டு எனவும் வெசாக் தினத்திற்கு உச்ச மதிப்பளித்து, தொழிலாளர் தினத்தினை பிற்போடாதிருக்க வேண்டும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts:

பூநகரி முழங்காவில் பகுதி காணி பதிவுகளை சீராக முன்னெடுக்கவென காணி கச்சேரியொன்றை நடாத்த திட்டம்
இன்று பெரிய வெள்ளி - விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவ...
நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு குழுவின் தலைவர் சமல...