இன்று பெரிய வெள்ளி – விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Friday, April 7th, 2023

உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றையதினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்தவிழாவின்போது கிறித்தவக் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதனிடையே ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலைமுதல் ஈஸ்டர் வாரம் முழுவதும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தினரும் களமிறக்கப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106