உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதில்லை – சீனா !
Friday, March 30th, 2018
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தாம் ஒரு போதும் தலையிட்டதில்லை என்று சீனா அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை சீனாவின் இலங்கைக்கான தூதுவர் செங் க்சூயன் இலங்கை தேசிய பொருளாதார சபையின் பொதுசெயலாளரை சந்தித்த போது கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா பரஸ்பர கௌரவம், நியாயம் மற்றும் நீதி என்பவற்றுடன் இருதரப்புக்கும் வெற்றியளிக்கும் வகையிலான புதுவித சர்வதேச தொடர்பினை கட்டியெழுப்பி வருகிறது.
இதற்கமைய இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பானது பொருளாதார மற்றும் சமுக அபிவிருத்தியை இலக்காக கொண்டு மக்களுக்கு பலனை சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் சிறப்பு அறிக்கை
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை - கூரிய வாள்களுடன் ஐவர் பொலிசாரால் கைது!
|
|
|


