துப்பரவுப் பணியில் ஈடுபட்ட மூதாட்டி மயங்கி உயிரிழப்பு !

Monday, March 26th, 2018

ஆலய வளாகத்தில் துப்பரவுப்  பணியில் ஈடுபட்டிருந்த முதாட்டி மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் நாவற்குழியில் நடந்துள்ளது.

நாவற்குழி ஜயனார் கோயிலடியைச் சேர்ந்த செல்லத்துரை தங்கம்மா (வயது -68) என்பவரே உயிரிழந்துள்ளார் அங்குள்ள  ஆலய வளாகத்தில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் மயங்கினார் அங்கிருந்து உடனடியாக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூதாட்டி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ப. குகனேஸ்வரன் முன்னிலையில் அறிக்கை  தாக்கல் செய்தனர் அறிக்கையை பார்வையிட்ட பதில் நீதவான் பிரதேச திடீர் சாவு விசாரணைஅதிகாரி சீ.சீ இளங்கீரன் மூலம் விசாரணைகளை நடத்தி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பொலிஸாரிற்கு உத்தரவிட்டார் .

யாழ் போதனா வைத்திய சாலையில் இறப்பு விசாரணைகளை மேற்கொண்ட பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற் கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் பணித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106