நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியது!
Saturday, March 24th, 2018
மேற்கு அவுஸ்திரேலியாவின் பர்த் நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹம்பலின் கடற்கரையில் கரையொதுங்கிய 150 திமிங்கிலங்களில் 140 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன.
உயிருடன் இருந்த 10 திமிங்கிலங்கள், கடலுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
டொல்பின் மீன் போன்ற வடிவமுடைய திமிங்கிலங்களே இவ்வாறு பாரியளவில் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இவ்வாறு நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியுள்ளமை அசாதாரணமான நிலை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பாகிஸ்தானின் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் சாவு
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!
ஏழைகளைப் பாதுகாக்க உயர் வருமானம் கொண்டவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் - உலக வங்கி தெரிவிப்பு!
|
|
|


