இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!
Thursday, March 5th, 2020
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த 14 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும், டெல்லி, தெலுங்கானாவில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கொரோன வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதுடன் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதுடன் 5,328 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Related posts:
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்து சிறையில் அடைக்க அதிபர் உத்தரவு...
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
வடகொரியா குறிவைத்திருக்கும் நாடுகள் தொடர்பில் வெளியானது அதிர்ச்சி தகவல்!
|
|
|


