விவசாயத்தினை இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது – விவசாய அமைப்புக்கள்!
Friday, March 23rd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவாகக் காணப்படுவதனால் இரண்டு ஆண்டுகள் சிறுபோகச்செய்கை முற்றாக மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
முல்லைத்தீவிலுள்ள பாரிய நீர்ப்பாசனக்குளமான வவுனிக்குளத்தின் கீழ் காலபோகத்தில் சுமார் ஆறாயிரத்து 60 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாயிரத்து 260 வரையான பயனாளிகள்நெற்செய்கையினையும் 135 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் 950 வரையான விவசாயிகள் ஏற்றுநீர்ப்பாசனத்தின் மூலமும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2016 2017ம் ஆண்டுகளில் நிலவிய மற்றும் தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் சிறுபோகச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் காலபோகச்செய்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.
இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்த குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனிக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்கள் மற்றும் விவசாயஅமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106