மூன்று வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம்!
Wednesday, March 21st, 2018
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்றையதினம் மூன்று விண்வெளி வீரர்கள் பயணிக்கவுள்ளனர்.
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து வருகின்றன. அங்கு சுழற்சிமுறையில் பணியாற்ற விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சோயுஷ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசாவின் ரிக்கி அர்னால்ட், ட்ருவ் பியுஸ்டல் மற்றும் ரஷ்யாவின் ஓலக்அர்டமியுவ் ஆகிய மூவரும் நாளை பயணமாகவுள்ளனர்.
அவர்கள் இன்று(21) பயணத்தை ஆரம்பித்து 23 ஆம் திகதி விண்வெளிக்கு சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கூகுள் ஆன்ட்ராய்டு போனில் புதிய வசதி!
நிலநடுக்கத்தை அறியும் சாதனம் உருவாக்கம்!
30 இலட்சம் ஒளியாண்டு தூரத்தில் அதிவேக ”நட்சத்திர மண்டலம்”!
|
|
|


