உள்ளூராட்சிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!
Tuesday, March 20th, 2018
உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகின்றன என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதேவேளை ஏதேனும் ஒரு கட்சிக்குபெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் முறை குறித்தும் அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 24 மாவட்டங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வெளியிடுவதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல்மூலம் மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களும் தெரிவாகியுள்ளனர்.
Related posts:
புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம் வருகின்றது!
அரச பாடசாலைகள் அனைத்தும் 194 நாட்களே நடத்தப்படும் - கல்வி அமைச்சு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தக...
|
|
|
வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் மும்முனைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்திக்...
நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்...
தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான ...


