குழந்தையை அடுத்து தாயும் மரணம்!

Monday, March 19th, 2018

சத்திரசிகிச்சை செய்து பிறந்த குழந்தை உயிரிழந்திருந்த நிலையில் தாயும் சிகிச்சை பயனளிக்காது இறந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு முள்;ளியவளையைச் சேர்ந்த உவைஸ் பமிதா (வயது – 21) என்பவரே உயிரிழந்தார். அவர் பிரசவத்துக்காக கடந்த 11 ஆம் திகதி மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று அதிகாலை 5 மணியளவில் சத்திரசிகிச்சை மூலமாகக் குழந்தை பிறந்தது. வலிப்புக் காரணமாக குழந்தை வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. சிகிச்சை பயனளிக்காது மதியம் 2 மணியளவில் உயிரிழந்தது.

தாயார் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். அவருக்கு இருதயவியாதி உள்ளது என்றும் மூளைக்குச் செல்லும் ஒட்சிசன் குறைந்து அவர் உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106