யாழ்.தொண்டமானாறு அணைக்கட்டு புதுப்பிப்பு!
Monday, March 19th, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள தொண்டமானாறு அணைக்கட்டினை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சம தரை நிலத்திற்கான நீர்ப்பாசனத்தை பெறக்கூடியதாக இருக்கும்.
குடாநாட்டு மக்கள் நிலத்தின் அடியில் இருந்து கிடைக்கும் மாசடைந்த குடிநீருக்குப் பதிலாக சுத்தமான குடிநீரினைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக அரசாங்கம் 40 கோடியே 50 லட்சம் ரூபாவினை முதலீடு செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், மேலதிக நிதி உலக வங்கியிடமிருந்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 80 சத வீதமான திட்டம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மே 15 ஆம் திகதி அளவில் முற்றாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் திட்டமிட்டது போல பூர்த்தி செய்ய முடியும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் வட மாகாண கிளிநொச்சி பிரிவின் திட்ட பணிப்பாளர் வி. பிரேமகுமார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106