வி.பி.என் செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்து!
Monday, March 19th, 2018
இலங்கையில் வி.பி.என் செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பற்ற வி.பி.என் செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் வி.பி.என் தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரவுகளுக்கமைய எட்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் இவ்வாறு வி.பி.என் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு வி.பி.என் பயன்படுத்தியமையினால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாகவும் மேலும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக கையடக்க தொலைபேசிகளில் உள்ள வி.பி.என் செயலியை அழித்து விடுமாறு; சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்காரமேலும் தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106