தரம் 1,2 மாணவர்களுக்கும் ஆங்கிலப் பாடம் அறிமுகம் !
Saturday, March 17th, 2018
தரம் 1,தரம்2 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று மீபே தேசிய கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது முதற் தடவையாக இந்தப் பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் படுகின்றன
இதுவரை அங்கிலப் பாடம் தரம் 3 இல் இருந்தே கற்பிக்கப்பட்டது தற்போது தரம் 1,2 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்;ளது .மகரகம தேசிய கல்வியல் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. பாடப்புத்தகத்துடன் இறுவட்டும் வழங்கப்படுகின்றது இந்தப் பாடத் திட்டத்தில் கதைகள் வரைதல்; ஆடல் பாடல்கள் பேசுதல் கதைத்தல் செயற்பாடுகள் அதற்கான உபகரணப் பாவிப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன
அறிமுக நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அதிதிகளாக கலந்து கொண்டு பாடப்புத்தகங்களை அறிமுகம் செய்தனர் .
Related posts:
பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு !
பிரான்ஸ் கோரிக்கை – உன்ரைனின் மேலும் நான்கு நகரங்களில் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!
உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் - சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு அதிகரித்து வருவத...
|
|
|


