பல்கலை ஊழியர்களது போராட்டத்துக்கு நிறைவேற்று உத்தியோகத்தர்களும் ஆதரவு !

Saturday, March 17th, 2018

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் போராட்டத்திற்கு ஆதாவளிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்தது

இது தொடர்பில் சங்கம் நேற்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது

கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .பேச்சு வார்த்தை நடத்துவதன்  மூலமாக அவர்களுக்கு நியாயமன தீர்வு கிடைக்கும் வரை நாம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

அதுவரை எமது கடமை வரம்புக்கு உட்பட்ட பணிகளை மட்டும் செய்வோம். பல்கலைக்கழக நாளாந்த நடவடிக்கைகள் இடம் பெற ஏதுவாக சம்மந்தப்பட்ட தரப்பினர் தொழிற் சங்கங்களுடன் பேசி சுமுகமாகத் தீர்வை வழங்கவேண்டும் என்றுள்ளது

இது தவிர ஊழியர் சங்கத்தினர் தமக்கான கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்று நிதி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளனர் என்று ஊழியர் சங்கம் தெரிவித்தது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106