சபைகளின் முதல் அமர்வுக்கான திகதி அறிவிப்பு!
Saturday, March 17th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சபைகளில் ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையுடன் வெற்றியெற்றுள்ளமையால் குறித்த சபை தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலமையில் முதலாவது அமர்வு நடத்த வேண்டிய நிலைகாணப்படுகின்றது
அவ்வாறு காணப்படும் 16 சபைகளின் முதலாவது அமர்வு ஆரம்பமாகும் திகதிகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சனால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சாவகச்சேரி நகர சபையின் முதலாவது அமர்வு அன்றய தினம் பி.ப 2 மணிக்கு நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளதுடன் பருத்தித்துறை நகர சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப 2 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவள்ளது. காரைநகர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப 2 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது
வேலணை பிரதேச சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 29 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு பி.ப 2 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது .
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 2 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப 2 மணிக்கு சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அடுத்த மாதம் 3 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப 2 மணிக்கு சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது .
நல்லூர் பிரதேச சபையின் அமர்வு அடுத்த மாதம் 4 ஆம் திகதி மு.ப. 9 மணிக்கு சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முதலாவது அமர்வு அன்றைய தினம் பி.ப 2 மணிக்கு சபையின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதனிடையே சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வு அடுத்த மாதம் 5 ஆம் திகதி மு.ப 9 மணிக்கு சபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106