குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளைப் பதிவு செய்ய கோரிக்கை!
Thursday, March 15th, 2018
காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவால் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்த குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளாது இருப்பவர்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இயங்கும் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்தில் தமது பதிவுகளை புதுப்பித்து அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
மாவட்டச் செயலகத்தின் அனுமதியின்றி அபிவிருத்தி மேற்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
1980 ற்கு முன்னர் வழங்கப்பட்ட பல காணிகள் பல்வேறு காரணங்களால் குத்தகை இரத்து செய்யப்பட்டு மீள காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு உடமையாக்கப்பட்டுள்ளது.
எனவே அவ்வாறான காணிகளில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டால் எந்தவித இழப்பீடும் வழங்கப்படாது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு குறித்த காணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106