முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விஷேட பயிற்சி!

Wednesday, March 14th, 2018

சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பத்தாயிரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அனைத்து முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படுவர்.

இந்தப் பயிற்சிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Related posts:


முக்கிய பதவிகள் எதிர்வரும் நாட்களில் மறுசீரமைக்கப்படும் - தேர்தலை எதிர்கொள்ளவும் தயார் என ஸ்ரீலங்கா...
தேயிலை ஏற்றுமதி மூலம் ஈரானுக்கு 20 மில்லியன் டொலர் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது – திருப்தி தெ...
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெர...