எரிபொருளின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Monday, March 11th, 2024
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை அழைத்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தன!
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வை...
ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது - சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்!
|
|
|


