தாய் மற்றும் சிசு மரண வீதம் குறைவடைந்துள்ளது – உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, March 14th, 2018

நாட்டில் தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கைஅடைந்துள்ளது.

இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரவுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது. இலங்கையில் தாய் மற்றும் சிசுமரணவீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.

உலக மட்டத்தில் வருடாந்தம் சுமார் 3 இலட்சம் பெண்கள் கர்ப்ப காலத்தின்போதும், பிரசவத்தின்போதும் உயிரிழக்கின்றனர்.

இவற்றில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே பெரும்பாலான மரணங்கள் பதிவாகின்றன. எனினும், இந்த தாய் மரண வீதத்தை கட்டுப்படுத்தும் இலக்கை தற்போது இலங்கை வெற்றிகொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106