போக்குவரத்து அதிகார சபையின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!
Thursday, March 8th, 2018
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் உள்ள 63 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாகாணப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆர்.வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் தற்போது 38 உத்தியோகத்தர்கள் பணி புரிகின்றனர். ஆனால் முகாமைத்துவ உதவியாளர்கள், நேரக் கணிப்பாளர்கள் உள்ளிட்ட 63 ஆளணி வெற்றிடங்கள் உள்ளன.
வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆளணி அனுமதி ஆள்சேர்ப்பு முகாமைத்துவ திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆள்சேர்ப்பை மேற்கொள்வதற்காக ஆட்சேர்ப்பு திட்ட அறிக்கை ஒன்றை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ஆள்சேர்ப்பு நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106