இலங்கை படையினர் 5,000 பேர் காணாமல் யோயுள்ளனர் -அமைச்சர்  மங்கள சமரவீர!

Monday, March 5th, 2018

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் ஒருதரப்பினருக்கு வரையறுக்கப்பட்டதல்ல. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் கடந்த காலங்களில் காணாமல் போயிருந்தனர். அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதே இந்த அலுவலகத்திற்கு உள்ள பொறுப்பாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் –

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகுமென்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2016ம் ஆண்டில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது. இந்த அலுவலகம் கடந்த மாதம் முதல் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிந்து, அது தொடர்பான சிபார்சுகளை மேற்கொள்வதே இந்த அலுவலகத்திற்கு உள்ள முக்கிய பொறுப்பாகும். 1980ம் ஆண்டு முதல் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை இது தொடர்பில் தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 1980ம் ஆண்டு முதல் காணாமல் போனோர் குறித்து, முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொடுத்து, காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷம், தாமும் செயற்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106