நட்சத்திர வீரர் நடால் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகல்!
Saturday, March 3rd, 2018
மெக்சிகன் டென்னிஸ் போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் காயம் காரணமாக ஸ்பெயின் நாட்டு வீரர் நடால் விலகியுள்ளார். இப் போட்டியின் போது இடுப்புபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் விளையாடுவதைத் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் மெக்சிகன் திறந்த டென்னிஸ் போட்டியில் தற்போது காயம் குணமடைந்ததால் பங்குபற்ற முடிவு செய்துள்ளார். இதற்கமைய சக நாட்டு வீரரான லோபசுடன் முதலாவது சுற்றில்மோதவிருந்த நிலையில், பயிற்சியின் போது மீண்டும் காயம் அடைந்துள்ளதால், நடால் மெக்சிகன் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
Related posts:
பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராகமீண்டும் ஹத்துருசிங்க !
வில்லியம்சனின் சதத்தால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து!
IPL போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை!
|
|
|


