வீதிக் குறியீடுகள் சீரமைப்பு!
Saturday, March 3rd, 2018
யாழ். குடாநாட்டில் பிரதான வீதிகளில் உள்ள வீதிக்குறியீடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் பருத்தித்துறை வீதி, கைதடி, நாவற்குழி போன்ற பிரதான வீதிகளில் உள்ள வீதிக் குறியீடுகள் அழிந்த நிலையில் காணப்பட்டன.
தற்போது இவ் வீதி குறியீடுகள் மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றன. அவற்றுள் பிரதான வீதிகளில் சந்தியை அண்டிய பகுதிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கோடுகளும் புதிதாக அமைக்கப்பட்டும் வருவதாக வீதி அதிகார சபை தெரிவித்தது.
குடாநாட்டில் பிரதான வீதிகளில் வரையப்பட்ட இந்த வீதி குறியீடுகள் அழிந்த நிலையில் உள்ளன. இந்த வீதி குறியீடுகளை மீளவும் மறுசீரமைப்பதற்கு கொழும்பில் இருந்து இதற்கான மூலப்பொருள்களும் இயந்திரமும் எடுத்து வரப்பட்டன. இவ் வீதிக்குறியீடுகள் தொடர்ந்து மறுசீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Related posts:
இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்!
போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது - அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும...
தரம் 10 மற்றும் 12 இல் O/L, A/L பரீட்சைகளை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்...
|
|
|


