அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி !

Wednesday, February 28th, 2018

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் விராட் கோலி 871 ஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரே சுற்றுப் போட்டியில், அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளார்.

தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்தில் விராட் கோலி 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கு கொண்டு நான்கு சதங்கள் உட்பட 871 ஓட்டங்களை பெற்றார்.

இதற்கு முன்னர் மேற்கிந்திய அணியை சேர்ந்த விவியன் ரிச்சட் ஒரே சுற்றுத் தொடரில் 1045 ஓட்டங்களை பெற்று முதலாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டொனால்ட் பிராட்மன் 974 ஓட்டங்களையும் இங்கிலாந்தை சேர்ந்த ஹேமண்ட் 905 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோற்ற அதேவேளை இறுதி டெஸ்ட்டில் வெற்றி பெற்று 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

ஒருநாள் போட்டித் தொடரை 5-1 என்ற கணக்கில் கோலியின் தலைமையிலான இந்திய அணி வெற்றது.

அதேபோன்று, இருபதுக்கு இருபது போட்டித் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106