பிணைமுறி மோசடி தொடர்பில் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை திரும்பியது!

Wednesday, February 28th, 2018

பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தற்போது சிங்கப்பூர் முகவரியில் இல்லை என குற்றப்புலனாய்வுஅதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தினால் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை அவரிடம் சேர்க்க முடியாமல் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடியில் முதலாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு இரண்டாவது தடவையாகவும்குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச பொதி பரிமாற்றல் சேவையின் ஊடாக குறித்த அழைப்பாணையை அவரின் சிங்கப்பூர் முகவரிக்கு அனுப்ப நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தைக் கோரியுள்ளது. இருப்பினும் அந்த முகவரியில் அர்ஜுன் மகேந்திரன் இல்லை என்ற குறிப்புடன், அந்த அழைப்பாணை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

Related posts:

பொது சுகாதார பரிசோதர்கள் இன்றி தேர்தலை நடத்த முடியாது - தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்ப...
எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்...
விசேட சுற்றுலா பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...