சிரியாவில் 30 நாள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானம்!
Tuesday, February 27th, 2018
சிரியாவில் 30 நாள் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள ஐ.நாவின் பாதுகாப்பு சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலால் பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு குவோட்டா பிரதேசத்தில் உள்ள மக்கள்அத்தியாவசிய பொருட்கள் எதுவும் அற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யுத்தநிறுத்தம் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை அனுப்பி வைக்க முடியும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் கடந்த வாரம் தொடக்கம் நடைபெற்று வரும் தொடர்ச்சியான தாக்குதல்களில் இதுவரை 120 சிறார்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மக்கள்பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கைதிகளை பரிமாறிக் கொள்ளத் தயார் – சிரியா!
ரஷ்ய இராணுவ விமானம் சிரியாவில் விபத்து!
சர்வதேச நாடுகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் போர் தொடரும் - இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் அ...
|
|
|


