கைதிகளை பரிமாறிக் கொள்ளத் தயார் – சிரியா!
Wednesday, February 15th, 2017
கிளர்ச்சியாளர்களுடன் கைதிகளை பரிமாறிக்கொள்ளத் தயார் என சிரியா அறிவித்துள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக கைதிகளை பரிமாறிக் கொள்ள சிரிய அரசாங்கம் விரும்புவதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கஸகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் கடந்த மாதம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு கட்டமாக இந்த வாரம்; மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
ரஸ்யா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிற்கும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இவ்வாறு கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளனர்.

Related posts:
கடத்தப்பட்ட நான்கு இந்தோனேஷிய மாலுமிகளும் குடும்பத்தோடு இணைந்தனர்!
மன்னிப்பு கேட்ட இளவரசி!
டிசம்பர் 31க்குள் வெளியேற வேண்டும் : மலேசிய அரசு அதிரடி !
|
|
|


