ஐ.நா மனித உரிமைகள் 37ஆவது கூட்டத்தொடர் இன்று!
Monday, February 26th, 2018
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர், இன்று (26) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது .
மாநாட்டின் முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கூட்ரஸ் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்றவுள்ளனர்.
இக் கூட்டத்தொடரில், ஆணையாளரின் உரை இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும். 21ஆம் திகதி இலங்கை குறித்த பிரதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வகுப்புப் பகிஷ்கரிப்பு: பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு!
சேதனப் பசளை : ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு சங்க சபையினர் பாராட்டு!
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கருத்தை வலுவாக்கும் இன்நாள் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!
|
|
|


