வரட்சியான காலநிலையால் 3 இலட்சத்திற்கதிகமான மக்கள் பாதிப்பு!
Sunday, February 25th, 2018
நிலவும் வரட்சி காலநிலையால் நாட்டின் 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் 91 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டமே வரட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அங்கு 11 பிரதேச செயலகங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் உட்பட விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மலை நாட்டின் நீர் வள பகுதிகளில் பல மாதங்களாக நிலவும் வரட்சி காலநிலையால் காஸல்ரீ மற்றும் மவுசாகெல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொக்குவில் பெற்றோல் குண்டு தாக்குதல்: 4 பேர் கைது!
சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் - இலங்கை தொடர்பில் இ...
ஐஎஸ் அமைப்பின் தலைவர் படுகொலை - துருக்கி அறிவிப்பு!
|
|
|


