ஐஎஸ் அமைப்பின் தலைவர் படுகொலை – துருக்கி அறிவிப்பு!
சிரியாவில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹ_சைன் அல் குரேசி கொல்லப்பட்டுள்ளார் என சிரியா அறிவித்துள்ளது.
துருக்கியின் எம்ஐடி புலனாய்வு பிரிவின் தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் எங்கு இடம்பெற்றது என துருக்கிதகவல் எதனையும் வெளியிடவில்லை.
கொல்லப்பட்ட நபரை துருக்கியின் புலனாய்வு பிரிவினர் நீண்டகாலமாக கண்காணித்துவந்தனர் என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளிற்கு எதிரான எங்கள் நடவடிக்கைகளை எந்தவித பராபட்சமும் இன்றி முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக சிரிய அதிகாரிகள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரியில் அமெரிக்காவின் விசேட படையினர் சுற்றிவளைத்தவேளை ஐஏஸ் அமைப்பின் தலைவராக செயற்பட்டவர் தன்னை வெடிக்கவைத்து உயிர்துறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106