யாழ்ப்பாணம் – பொன்னாலை  வீதி அகலிப்பிற்காக காணி சுவீகரிப்பு!

Sunday, February 25th, 2018

யாழ்ப்பாணம் பொன்னாலை வீதி அகலிப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடாக காணி சுவீகரிக்கும் நடவடிக்கை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன.

குறிப்பாக சுவீகரிக்கப்படவிருக்கும் காணிகளுக்கான நில அளவை வரைபடம் தயாரிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

ஏற்கனவே காணிகள் சுவீகரிப்புத் தொடர்பாக உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த வீதியை அகலித்து புனரமைப்புச் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் இந்த ஆண்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts:


வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி...
சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்:  நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள்...
நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாய...