சுயதொழிலை மேம்படுத்த உதவித்திட்டங்களை பெற்றுத்தாருங்கள்: நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கை!
Tuesday, January 10th, 2017
தமது வாழ்வாதார தேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சுயதொழில்களை மேம்படுத்துவதற்கு உதவித்திட்டங்களை பெற்றுத்தருமாறு நெடுந்தீவு அலைகடல் மகளிர் அமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதி மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொள்ளும் முகமாக குறித்த பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரனிடமே (வி.கே.ஜெகன்) குறித்த பகுதி மக்கள் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதி மக்களது அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கடந்தகாலங்களில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி அதிக கரிசனையுடன் பணிகளை செய்திருந்ததாக சுட்டிக்காட்டிய மக்கள் தற்போது மக்களது வாழ்வுமுறைக்கான தேவைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் தமக்கு இன்றும் அதிகமான செயற்றிட்டங்களை தேவையாக உள்ளதாகவும் குறிப்பாக தமது வாழ்வாதாரத்திற்கான சுயதொழில்களை மேற்கொள்வதற்கு உதவி திட்டங்களை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மக்களது கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த பகுதி மக்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியூடாக தொடர்புகொண்டு கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது நெடுந்தீவு பிரதேச நரிவாக செயலாளர் முரளி மற்றும் குறித்த பகுதி மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106