கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!

Saturday, February 24th, 2018

கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவ விநியோகம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அமைந்துள்ள 18 மத்தியநிலையங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சை உற்பத்தி மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளில் இடம்பெறவுள்ளது. இதனுடன் கொரிய மொழி திறன் பரீட்சை, கணனி ஊடாகவே இடம்பெறவுள்ளது.

மேலும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை நிர்மாணத்துறைக்கான பரீட்சையும், மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை உற்பத்தி துறைக்கான பரீட்சையும் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts:

சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே செயற்படுவதாக சுட்டிக்காட்டு!
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கு புதிய வழிகாட்டல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெர...
நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!