மீண்டும் சங்கக்கார அதிரடி!
Saturday, February 24th, 2018
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவின் பங்களிப்புடன் முல்தான் சுல்தான் அணி வெற்றி பெற்றது.
ஃபெசாவார் சல்மி அணிக்கு எதிராக முல்தான் சுல்தான் அணி நேற்று விளையாடியது.இதில் முதலில் துடுப்பாடிய பெசாவார் சல்மி அணி, 6 விக்கட்டுகளை இழந்து, 151 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்து துடுப்பாடிய முல்தான் சுல்தான் அணி, 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.முல்தான் சுல்தான் அணிக்காக அதிரடியாக விளையாடிய குமார் சங்கக்கார 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
Related posts:
ரசிகர்களின் வன்முறையால் ரஷ்ய அணிக்கு அபராதம்!
இனி ஒரு தடவையேனும் திரும்பிப் பார்க்கமாட்டேன்- நீச்சல் வீரர் பெல்ப்ஸ் !
ஆசிய கிண்ண ரி - 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
|
|
|


