ஊர்காவற்றுறையில் ஆதனவரி மதிப்பீடுகள்

Thursday, February 22nd, 2018

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 134, 139 க்கு அமைவாக ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எல்லைக்குள் ஆதனவரி மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன் ஒரு அங்கமாக ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறை உப அலுவலகத்திற்குரிய ஆதனவரி மதிப்பீடானது எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஊர்காவற்றுறை உப அலுவலகமானது ஜேஃ49 ஊர்காவற்றுறை, ஜேஃ50 பருத்தியடைப்பு, ஜேஃ51 கரம்பொன் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு வட்டாரமாகும்.

எனவே மதிப்பீட்டுக் குழுவினர் மதிப்பீட்டுக்காக இடங்களுக்கு சமுகமளிக்கும் போது, ஆதன உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி ஆதனவரி மதிப்பீடு சிறப்பாக நடைபெற ஒத்துழைக்குமாறு பிரதேச சபை கேட்டுக் கொள்கின்றது என பிரதேச சபை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106