ஜி. சி. ஈ உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஈ. ரி. எப் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான கொடுப்பனவுக்கு விண்ணப்பம் கோரல்

Thursday, February 22nd, 2018

ஜி. சி. ஈ உயர்தர பரீட்சை 2017 இல் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை (ஈ. ரி. எப்) உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புப் பணி வெகுமதி வழங்கப்படவுள்ளது. மேற்படி வெகுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் நம்பிக்கைக்குப் பொறுப்பு நிதியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களின் பிள்ளைகள் உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருந்தால் விண்ணப்பிப்பதற்கு தகுதி பெறுகின்றனர்.

ஒவ்வொருவருக்கும் தலா 12 ஆயிரம் ரூபா கல்வி ஊக்குவிப்பு வெகுமதியாக வழங்கப்படவுள்ளது. 5 ஆயிரம் பேருக்கு ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படவுள்ளன. முழுமைப்படுத்திய விண்ணப்ப படிவங்களை புலமைப்பரிசில் அலுவலர் ஊழியர் நம்பிக்கைக்குரிய பொறுப்பு நிதியமைச்சர், இலக்கம் 92 கிருனவீதி நாரகன் பிட்டி, கொழும்பு – 05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நம்பிக்கை நிதியத்தின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்தோ பிராந்திய அலுவலகங்களிலோ இருந்தே பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106