ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் குறித்து விழிப்புணர்வு!
Thursday, February 22nd, 2018
இலங்கையர்கள் மத்தியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் சட்டதிட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டின்மனித வளத்துறை அமைச்சர் அல் ஹமாலி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்புக்காக ஐக்கிய அரபு இராச்சியத்துக்குச் செல்லும் இலங்கையர்கள் அந்த நாட்டின் ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலான அனுகூலங்களைப்பெற்றுக் கொள்ள முடியும் என்று அல் ஹமாலி தெரிவித்துள்ளார்.
Related posts:
அடையாளம் காணப்படாத நிலையில் பெரும் எண்ணிக்கையிலான சடலங்கள்!
முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது - உலக சுகாதார அமைப்பு !
சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ...
|
|
|


