சென். பற்றிக்ஸ் மாகாணச் சம்பியன்
யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டுச் சங்கம் நடத்திய மாகாண மட்ட கால்பந்தாட்டத் தொடரில் 20 வயது ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற
இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்துதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. ஆட்டத்தின் 20 ஆவது நிமிடத்தில்சென்.பற்றிக்ஸின் முதல் கோலைப் பதிவுசெய்தார் பற்றிக்ஸின் வீரர் கெயின்ஸ்.
25 ஆவது நிமிடத்தில் சாந்தன் பற்றிக்ஸின் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.41 ஆவது நிமிடத்தில் கெயின்ஸ் மற்றொரு கோலைப் பதிவுசெய்ய 3:1 என்றுஆதிக்கம் செலுத்தியது சென்.பற்றிக்ஸ். 43 ஆவது நிமிடத்தில் காஸ்ரோமகாஜனவின் சார்பாக ஒரு கோலைப் பதிவுசெய்ய முதல் பாதியின் முடிவில் 3:1 என்றகோல் கணக்கில் முன்னிலை பெற்றது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ்.
இரண்டாம் பாதியின் 68 ஆவது நிமிடத்தில் சாந்தன் மற்றொரு கோலைப் பதிவுசெய்தார். அதுவே ஆட்டத்தின் இறுதிக் கோலுமாக அமைய முடிவில் 4:1 என்ற கோல்கணக்கில் கம்பீரமான வெற்றியுடன் கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம்சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106