கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு பட்டம் ஏற்றிய போது சாவகச்சேரி பகுதியில் நடந்த விபரீதம்

Tuesday, February 20th, 2018

சாவகச்சேரியில் பட்டம் ஏற்றிய சிறுவன் கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வயல் பகுதியில் பட்டம் ஏற்றிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஜெயகுமாரன் தீசன் என

தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் பட்டம் ஏற்றிக்கொண்டு பின்பக்கமாக ஓடியபோதே சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் உயிரிழந்த சிறுவனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106