நாட்டில் ஊழலை ஒழிக்க விஷேட வேலைத்திட்டம்!

Monday, March 14th, 2016

நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது தொடர்பில் அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கு தெளிவூட்டும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் முதற்கட்டமாக, அண்மையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள உயர் அதிகாரிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளின் சில யோசனைகளை செயற்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.  மேலும், விரைவில் ஏனைய அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இது குறித்து தளிவுபடுத்தவுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106