கடந்த 35 நாட்களில் ரயில் விபத்துக்களில் 57 பேர் பலி!

Tuesday, February 20th, 2018

நாட்டில் இந்த வருடத்தில் கடந்த 35 நாட்களில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் மிதிபலகையில் பயணித்தவர்கள் மற்றும் ரயில்வே கடவைகளில் வீதி மாறியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில் பாதைகளை பயன்படுத்தும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு முகாமையாளர் அநுர பிரேமரத்ன கோரியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடத்தின் பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணித்த 1295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 40 இலட்சத்துக்கு 32 ஆயிரத்து 772 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106