எதிர்வரும் 15ஆம் திகதிமுதல் சிறைக் கைதிகளை பார்வையிட அனுமதி – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Tuesday, August 11th, 2020
சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளை பார்வையிடுவதற்கு வாரத்திற்கு ஒருவரை மாத்திரம் அனுமதிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
கைதிகளால் பெயர் வழங்கப்படும் நெருங்கிய உறவினருக்கு மாத்திரமே அவர்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது
முன்பதாக நாட்டை அச்சுறுதிய கொரோனா தொற்று சிறைக் கைதிகளையும் தாக்கியமை அடுத்து சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான அனுமதி வழங்கப்படகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்க...
அழிவடைந்த சோள அறுவடையை கொள்வனவு செய்ய நடவடிக்கை!
108 ஆவது பொன் அணிகள் போர் வரும் 27 திகதி ஆரம்பம்!
|
|
|


