சுவீடன் வீராங்கனைக்கு தங்கம்!

Sunday, February 18th, 2018

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் பெண்களுக்கான பையத்லான் தனிநபர் பிரிவில் சுவீடன் மங்கை 22 வயதான ஹன்னா ஓபெர்க் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

பையத்லான் பந்தயத்தில், கம்பு ஊன்றி 15 கிலோமீற்றர் தூரம் பனியில் சறுக்க வேண்டும். இடையில், துப்பாக்கி சுடுதலிலும் திறமையை காட்ட வேண்டும். துப்பாக்கி சுடுதலில் இலக்கை தவற விடும் போது, அதற்கு தண்டனையாக பனிச்சறுக்கு ஓட்டத்தில் கூடுதல் நேரம் சேர்த்துக் கொள்ளப்படும். 87 பேர் களம் இறங்கிய விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த ஹன்னா ஓபெர்க், துப்பாக்கி சுடுலில் 4 முறையும் இலக்கை சரியாக சுட்டு அசத்தினார். முடிவில் அவர் 41 நிமிடம் 07.2 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

சுலோவக்கியாவின் அனஸ்டசியா குஸ்மினா (41 நிமிடம் 31.9 வினாடி) வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின் லாரா டால்மீயர் வெண்கலப்பதக்கமும் (41 நிமிடம் 48.4 வினாடி) பெற்றனர். லாரா டால்மீயருக்கு இது 3-வது பதக்கமாகும். ஏற்கனவே பையத்லான் ஸ்பிரின்ட், பர்சுய்ட் ஆகிய பிரிவுகளில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருந்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106