சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்து!
Friday, February 16th, 2018
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன் இவை பயன்பாட்டுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே, விமான நிலையத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழுவதும், சில சமயங்களில் மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று(15) காலை கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு முனையத்தின் 3-வது நுழைவாயிலில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என தெரிவித்துள்ளனர்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106