இரு பிள்ளைகளின் தாய் உயிரிழந்த நிலையில் மீட்பு வட்டக்கச்சியில் சம்பவம்!

Friday, February 16th, 2018

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

வட்டக்கச்சி 10 வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது-24) என்வபரே உயிரிழந்துள்ளார். நிரோசாவுக்கு ஏழு வயது மகனும், ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.  கிராமத்தில் நடந்த நிகழ்வொன்றுக்கு அயலவர்கள் சென்றிருந்தனர். கணவர்

தொழிலுக்குச் சென்றிருந்தார். அப்போதே பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அவரது சடலம் வீட்டின் பின்புறம் இருந்து மீட்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவும், கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106