இலங்கை யுத்தம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட பாகிஸ்தான் செயற்பாட்டாளர் காலமானார்!

Monday, February 12th, 2018

ஐ.நா சபையால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் அங்கம் வகித்த பாகிஸ்தானின்செயற்பாட்டாளர் அஸ்மா ஜஹாங்கிர் மாரடைப்பினால் காலமானார்.

66 வயதான இவர் சட்டத்தரணியாகவும் ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணை நடத்துவதற்காக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள்ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 3 நிபுணர் குழுவில் அங்கம் வகித்திருந்தார்.

Related posts: