டொலருக்கு எதிராக முதன் முறையாக பாரிய வீழ்ச்சியை சந்தித்த ரூபா!
Thursday, February 8th, 2018
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை இலங்கை ரூபாய் சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய பண பரிமாற்ற விகித மதிப்புகளுக்கமைய முதன் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 156ரூபாவை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 156.13 ரூபாய் வரை டொலர் பெறுமதி அதிகரித்து காணப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம்திகதி 155.94 ரூபாயாகக் காணப்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சிக்கான காரணம் நாட்டிலுள்ள முதலீட்டாளர்களுக்கான டொலர் தேவை அதிகரித்தமையே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கும் மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கும் தொடர்பு இல்லை -...
லொக்டவுன் அச்சத்தில் கடைகளி்ல் குவிந்த மக்கள் – பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு!
உலக உழைப்பாளர் தினம் இன்று!
|
|
|


