மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Friday, April 14th, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய மின்சாரச் சபை சட்டத்தின் செயற்பாட்டு வரைவு மேம்பாட்டு முகவர்கள், வலுசக்தி நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் பகிரப்பட்டுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த குழு இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் அதன் பொறியிலாளர்கள் சங்கம் ஆகியவற்றை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இலங்கை மின்சாரசபையில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களையும் விரைவில் குறித்த குழு சந்திக்கவுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் மாத இறுதிக்குள் உத்தேச புதிய மின்சாரச் சட்டத்தின் இறுதி வரைவு கிடைக்கும் என தாம் நம்புவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106