இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக ரணில் ஜெயவர்தன நியமனம்!

Thursday, February 8th, 2018

இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக பிரிட்டிஷ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்தனவை  அந்நாட்டு பிரதமர் திரேஸா மே நியமித்துள்ளார்.

இந்நிலையில் ரணில் ஜெயவர்தன பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு தூதுவராக செயற்படுவார். இவர் எதிர்வரும் 15 ஆம்திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் இம்மாதம் 17 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். இக்காலப்பகுதிக்குள் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதுடன் பிரட்டன் மற்றும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக விடயத்திலும் கவனம் செலுத்துவார்.

மேலும் ரணில் ஜெயவர்தன 2015 ஆம் ஆண்டு பிரிட்டனின் North East Hampshire  மாநிலத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் 2017 ஆம் ஆண்டும்பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106